ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'யாரடி நீ மோகினி' படத்தில் இருந்து ஆரம்பித்த தனுஷ் நயன்தாரா நட்பு, அடுத்து தனுஷ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு சம்பளம் வாங்காமல் ஆடிக்கொடுக்கும் அளவிற்கு நெருக்கமாக தான் இருந்தது. அதன் அடிப்படையில் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் 'நானும் ரௌடி தான்' படத்தில் அப்போதுதான் வளர்ந்து வந்த விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க கேட்டதும் அதற்கு உடனடியாக சம்மதித்தார் தனுஷ்.
ஆனால் அந்த படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் உருவான காதல், படப்பிடிப்பை தாமதப்படுத்தியதுடன் தனுசுக்கு மிகப்பெரிய நட்டத்தையும் ஏற்படுத்தியது. அதுதான் இன்று நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்திற்காக அந்த படத்தின் கிளிப்பிங்குகளை பயன்படுத்தக் கூடாது என தனுஷ் நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு சென்று விட்டது. நயன்தாராவும் பதிலுக்கு தனுஷை பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை சீரியஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் அந்தப்படத்தில் இவர்களுடன் இணைந்து நடித்த நடிகை ராதிகாவின் பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதில் ராதிகா பேசும்போது, “நானும் ரௌடி தான் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ஒரு நாள் தனுஷ் என்னிடம் பேசினார். அக்கா படப்பிடிப்பு எப்படி போகிறது என்று கேட்டார். நன்றாக போகிறது என்று சொன்னேன். நயன்-விக்கி இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். சும்மா சொல்லாதப்பா அப்படி எல்லாம் ஒன்றும் எனக்கு தென்படவில்லை என்று கூறினேன். அதற்கு நீங்கள் எல்லாம் இவ்வளவு பெரிய நடிகை என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது உங்களுக்கு தெரியவில்லையா என்று கேட்டார்.
அந்த அளவிற்கு என் முன்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எப்போதும் படப்பிடிப்பு வேலைகள் தொடர்பாகத்தான் பேசிக் கொண்டார்கள். ஆனால் என்னையே ஏமாற்றி விட்டார்களே. இதையெல்லாம் கவனிக்காத நான் என்ன ஒரு நடிகை என்று கூட எனக்கு தோன்றியது” என்று கூறியுள்ளார். படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேருக்கும் வெளிப்படையாக தெரிந்த நயன் - விக்கியின் காதல், ராதிகாவிற்கு தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.